தமிழ்நாடு

மாணவிகள் ஆற்றில் மூழ்கி பலி: பள்ளியில் பெற்றோர்கள் வாக்குவாதம்!

விராலிமலை அரசுப் பள்ளி மாணவிகள் ஆற்றில் மூழ்கி பலியானதையடுத்து பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்ற சூழல் நிலவுகிறது. 

DIN

விராலிமலை அரசுப்பள்ளி மாணவிகள் ஆற்றில் மூழ்கி பலியானதையடுத்து பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்ற சூழல் நிலவுகிறது.

கரூர் மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கரூர் மாவட்டம் தொட்டியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை போட்டி நடைபெற்று முதல் ரவுண்டு முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 13 மாணவிகள் மாயனூர் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். 

அப்போது தமிழரசி (8 ஆம் வகுப்பு), சோபியா (8 ஆம் வகுப்பு), இனியா(6 ஆம் வகுப்பு) லாவண்யா ((6 ஆம் வகுப்பு) ஆகியோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் 4 பேரின் உடல்களும் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கால்பந்து போட்டிக்குச் சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியானதையடுத்து பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு நின்று கண்ணீர் விட்டு கதறி அழுது வருகின்றனர். சிலர் ஆசிரியர்களைக் கண்டித்து ஆசிரியர்களுடனும் காவலர்களுடனும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஒருவித பதற்ற சூழல் நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி முமையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

யோவ் நான் கேட்டனா...? லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த ரஜினி!

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT