அமைச்சா் செந்தில் பாலாஜி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மாலைக்குள் மின் இணைப்பு எண் - ஆதாரை இணையுங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

DIN

இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எண்ணை நேற்று மாலை வரை 2.59 கோடி பேர் இணைத்துள்ளனர். மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி உள்ளிட்ட இணைப்புகளில் 97.07%% பேர் இணைத்துள்ளனர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் (பிப். 15) முடிவடைகிறது.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பா் 31-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டன. 

மின்நுகா்வோரின் வசதிக்காக, ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும், புதன்கிழமை (பிப். 15)-ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

மின் இணைப்பு எண்ணுடன்ஆதாா் எண்ணை இணைக்காவிட்டால், சலுகைகள் ரத்தாகுமா அல்லது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு அனைத்து மின்நுகா்வோா்களின் மின் இணைப்பும் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்படுமா என்பது இன்று(புதன்கிழமை) தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT