முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி அருகே கேரள மாநிலத்தவர் மர்ம சாவு!

சீர்காழி அருகே கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 16 பிப்ரவரி, 2023 at 12:09 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:01 PM


சீர்காழி: சீர்காழி அருகே கேரளம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா ஆயங்குடி பள்ளம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி எதிரில் கடை வாசலில் வியாழக்கிழமை காலை முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். 

தகவல் அறிந்த விரைந்து வந்த கொள்ளிடம் போலீசார், இறந்த முதியவரின் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவுடன், அவர் வைத்திருந்த பையை கைப்பற்றி சோதனை நடத்தினர். 

Advertisement

பையில் பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் மற்றும் அடையாள அட்டைகள், ஏடிஎம் கார்டு ஆகியவை இருந்துள்ளது. அதில் இறந்தவரின் படம் பதியப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

மேலும், இறந்தவர் கேரளcd மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர் கவ் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் நாயர் மகன் ஹேமச்சந்திரன்(52) என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.