கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்து நியமனம் வழங்க வலியுறுத்தி சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

DIN

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். 

அரசுப் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறு நியமனத் தேர்வு நடத்தும் அரசாணை 149-யை ரத்து செய்ய வேண்டும், 2013, 2014, 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் நியமனம் வழங்கப்படும் எனக் கூறிய வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுவரை 12 முறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் எனவே அரசு நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT