முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரி: சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!

புதுச்சேரியில் சிக்னலில் நின்றிருந்த புதிய பிஎம்டபிள்யூ காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
பகிர்:

புதுச்சேரியில் சிக்னலில் நின்றிருந்த புதிய காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகன ஓட்டிகளின் உதவியுடன் போக்குவரத்து போலீசார் விரைந்து தீயை அணைத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து விழுப்புரம் நோக்கி புதிய கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே வந்தபோது சிக்னல் போடப்பட்டதால் சிக்னலில் நின்றது.

அப்போது காரின் முன்பகுதி என்ஜினில் இருந்து புகை வெளியே வந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே காரில் இருந்த நபர் விரைந்து இறங்கி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

சிக்னலில் நின்றபோது கார் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகள் உதவியுடன் காரில் எரிந்த தீ விரைந்து அணைத்தனர். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் காரணமாக இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.