தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயிலில் திரெளபதி முர்மு சாமி தரிசனம்!

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழகம் வந்துள்ள திரெளபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார். 

DIN

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழகம் வந்துள்ள திரெளபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார். 

குடியரசுத் தலைவருக்கு மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படவுள்ளது. 

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முழுக்க காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் வளாகத்தில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் கேமராக்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிபு
உயரமான மாடிகளின் மீது இருந்தும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் 

மீனாட்சி அம்மன் கோயில் வளாகம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படவுள்ளது. 

சுற்றுலா மாளிகையில் 20 நிமிடங்கள் ஓய்வு எடுக்கிறார். அந்த நேரத்தில் எந்தவித அரசியல் தலைவர்களையும் சந்திக்கவில்லை.

கோயிலில் மதிய உணவு உண்ட பிறகு மதுரையிலிருந்து கார் மூலம் விமானம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT