தமிழ்நாடு

தீரன் சின்னமலை படைத்தளபதி மாவீரர் பொல்லானுக்கு சிலை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

DIN

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதியான மாவீரர் பொல்லானுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமையவுள்ள மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் இடத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் படைத்தளபதியான மாவீரர் பொல்லானுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமையவுள்ள இடத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் முன்னிலையில் பார்வையிட்டார்கள்.

மாவீரர் பொல்லான் வாழ்க்கை வரலாறு என்பது, நாட்டிற்கு மிகப்பெரிய தியாகம் செய்த தியாகியாக உள்ளார். மூன்று பெரிய போர்களிலே தீரன் சின்னமலை அவர்களோடு இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது ஆங்கில அரசாங்கம், அவர்களுடைய படை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறது, என்னென்ன திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொல்லான் எப்படியோ அறிந்து தீரன் சின்னமலை அவர்களிடத்திலே அதை தெரிவித்து, அவர்களுடன் இணைந்து, அந்த வெற்றியை பெறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தவர் மாவீரர் பொல்லான் ஆவர்.

மேலும், மாவீரர் பொல்லான் வாழ்க்கை வரலாற்றினை இன்றைய சந்ததியினர் அறிந்திடும் வகையில் மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட, வடுகப்பட்டி இ கிராமம், ஜெயராமபுரத்தில் தமிழ்நாடு பூமிதான வாரியம், சென்னைக்கு சொந்தமான சுமார் 0.16.6 ஹெக்டேர் (41.00) சென்ட் பரப்பளவில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான இடம் புலத்தணிக்கை மேற்கொண்டு சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அரசிற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயராமபுரத்தில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், அறச்சலூர் பேரூராட்சி தலைவர் திரு.விஜயகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எதையும் தலைக்கு ஏத்தமாட்டேன்!”: ராகவா லாரன்ஸ் பேட்டி

கொல்கத்தாவிற்கு அதிர்ச்சியளிக்குமா மும்பை?

நம்பிக்கையின் வானவில்...!

திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கார் விபத்து: 3 பேர் பலி

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

SCROLL FOR NEXT