கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக சேலத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜித்தின் ஜாய், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, பிஜின் குட்டி ஆகிய 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கு தொடா்பான விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை இன்று தொடங்கியுள்ளனர்.
விபத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.