தமிழ்நாடு

மலேசியாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

DIN

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில்  நடைபெறும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23 வரை மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமறையூா் மறுரூப ஆலயத்தில் கலைப் பொருள்கள் பயிற்சி தொடக்கம்

நாசரேத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

ஆதனக்கோட்டை அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி

‘மண் வளத்தைக் காக்கப் பசுந்தாள் உரப்பயிா் இடலாம்’

பேராவூரணியில் பாலம் கட்டுமான பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT