கோப்புப்படம் 
தமிழ்நாடு

விழுப்புரம் காப்பகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் 2-வது நாளாக சோதனை!

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரிலுள்ள அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரிலுள்ள அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் என்ற பெயரில் இயங்கி வந்த ஆதரவற்றோர் தனியார் காப்பகத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த 10-ஆம் தேதி செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி தலைமையிலான காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் சோதனை நடத்தினர். 

இதைத் தொடர்ந்து  காப்பக உரிமையாளர் ஜிபீன்பேபி (48), மனைவி மரியாள் ஜிபீன் (45) உள்பட 9 பேர் மீது 13 பிரிவுகளின் வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர். மேலும் காப்பகத்தில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள், மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தலைமையில், இப்பிரிவின் விழுப்புரம் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட 20 பேர் அடங்கிய குழுவினர், குண்டலப்புலியூரிலுள்ள காப்பகத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சோதனை மேற்கொண்டனர்.

காப்பகத்திலுள்ள ஒவ்வாரு அறைக்கும் சென்று சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர் குழுவும் சோதனை நடத்தியது.

இந்த நிலையில் அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT