சென்னையில் நில அதிர்வா? பீதியில் மக்கள்
சென்னை அண்ணா சாலையில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை அண்ணா சாலை அருகேவுள்ள லாயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள மூன்று கட்டடங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலை 10.15 மணியளவில் கட்டடங்களில் லேசாக குலுங்கியதை அடுத்து ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.
மேலும், அண்ணா சாலையின் சில பகுதிகளிலும் நில அதிர்வானது உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளால் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்ட அதே சமயத்தில் இலங்கையின் புத்தளத்தில் ரிக்டர் அளவில் 3.2ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இருப்பினும், நிலநடுக்கம் தொடர்பாக இதுவரை எந்தவொரு உறுதிபடுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.