அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை (பிப்.23) தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக பொதுக் குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழவின் நிகழ்ச்சி நிரலில் பன்னீர் செல்வத்தை நீக்குவது இல்லாதபோது பன்னீர் செல்வத்தை எப்படி நீக்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிக்க | ‘ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில் கவனம் செலுத்த வேண்டும்': அமைச்சர் பொன்முடி அறிக்கை
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை காரணம் காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் முக்கிய முடிவுகள் எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான படிவத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட அதிமுக பொதுக்குழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
இதையும் படிக்க | மலேசியாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
இது மட்டுமின்றி. இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு தேவையான ஏ, பி படிவத்தில் கையெழுத்திடுவதற்கான அதிகாரம் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை(பிப்.23) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கால் பரபரப்பு கிளம்பியுள்ளது.