முகப்பு
தமிழ்நாடு

‘வலுவான ஆளுமைக்குச் சான்று’: இபிஎஸ்ஸுக்கு திருமாவளவன் வாழ்த்து

அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:

அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ்ஸுக்கு திருமாவளவன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “அடிப்படைத் தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே.” என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →