முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா சிலைக்கு இபிஎஸ் மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வந்த இபிஎஸ்ஸுக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்தார்.

இதனை தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்த நாள் மலரை வெளியிட்ட இபிஎஸ், அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.