முகப்பு
தமிழ்நாடு

அன்பு ஜோதி காப்பக வழக்கு: 8 பேருக்கு பிப்.28 வரை சிபிசிஐடி காவல்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கு பிப்ரவரி 28 வரை சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:36 AM
8 பேருக்கு பிப்.28 வரை சிபிசிஐடி காவல்
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கு பிப்ரவரி 28 வரை சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் மனிதஉரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாகவும் எழுந்த புகாரின் பேரில், காப்பக உரிமையாளர் ஜிபீன் பேபி, அவரது மனைவி மரியாள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட நிலையில், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து வேடம்பட்டு சிறையிலும், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 பேரும் தனித்தனி போலீஸ் வாகனங்களில் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அனைவரும் நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் 8 பேரையும் பிப். 28-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 8 பேரையும் பிப்.28 காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.