தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் திமுக - அதிமுகவினா் இடையே தள்ளுமுள்ளு

இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதியின் பெரியண்ணா வீதியில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

DIN

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியின் பெரியண்ணா வீதியில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசுப் பொருள்கள் வழங்குவதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றம் சாட்டிய நிலையில், பெரியண்ணா வீதியிலுள்ள கலைமகள் வாக்குச்சாவடி அருகே திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தகறாறு ஏற்பட்டது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே சில வாக்குச்சாவடி மைங்களில் வைக்கப்படும் மை, எண்ணெய் வைத்தாலே அழிவதாக அதிமுக புகாரளித்தது. ஆனால் மை அழியவில்லை என்று தேர்தல் அலுவலர் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள இரு வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT