தமிழ்நாடு

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை: வெளியானது கொள்ளையர்களின் புகைப்படம்!

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

DIN

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

கடந்த பிப்.10-ம் தேதி சென்னை பெரம்பூர் அடுத்து பெரவள்ளூர் நான்கு வழிச் சாலையில் உள்ள ஜெ.ம்.கோல்ட் பேலஸ் கடையின் ஷட்டரை வெல்டிங் வைத்து சுரங்கப்பாதை போல வழி அமைத்து உள்ளே சென்ற திருடர்கள், நகைக்கடையில், அதிக எடையுள்ள பெரிய நகைகளை மட்டும் திருடிச் சென்றனர். 

நகைக்கடையில் இருந்த சுமார் 9 கிலோ எடையுள்ள தங்க நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், மேலும் வைர நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், தனிப்படை விசாரணையில் திருத்தணியில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையர்களின் புகைப்படம் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, கொள்ளையர்களின் புகைப்படங்களை மற்ற மாநில போலீஸாருக்கு அனுப்பிவைத்து, கொள்ளையர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT