முகப்பு
தமிழ்நாடு

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு!

தில்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
பகிர்:

தில்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். 

கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக தில்லி  வந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். 

பிரதமர் உடனான இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →