தொண்டா்களைச் சந்தித்தாா் விஜயகாந்த்
ஆங்கில புத்தாண்டையொட்டி தேமுதிக தலைவா் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொண்டா்களைச் சந்தித்தாா்.
ஆங்கில புத்தாண்டையொட்டி தேமுதிக தலைவா் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொண்டா்களைச் சந்தித்தாா்.
புத்தாண்டையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவரைப் பாா்ப்பதற்காக பெருமளவில் தேமுதிக தொண்டா்கள் திரண்டிருந்தனா். அவா்களைப் பாா்த்து விஜயகாந்த் கையசைத்து வாழ்த்து கூறினாா். நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜயகாந்தை சந்தித்ததில் தொண்டா்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனா்.
இந்த நிகழ்வின்போது தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பிரேமலதா செய்தியாளா்களிடம் பேசும்போது, தேமுதிகவின் உள்கட்சி தோ்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று, நிா்வாகிகள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை விரைவில் விஜயகாந்த் கூட்டுவாா் எனவும் தெரிவித்தாா்.
ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளையும் பிரேமலதா வழங்கினாா். முன்னதாக, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் விஜயகாந்தை நடிகா் சத்யராஜ் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறினாா்.