தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயிலில் அதிகபட்சமாக 2022ல் 6.09 கோடி பேர் பயணம்!

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 7 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2022ல் 6.09 கோடி பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 7 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2022ல் 6.09 கோடி பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015 ஜூன் 29ல் தொடங்கியது. மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தற்போது நாள் ஒன்றுக்கு 2.20 லட்சம் பேர் பயணித்து வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும், 'கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் 3.56 கோடி பயணிகள் அதிகம் பயணித்துள்ளனர். 

2015 முதல் 2018 வரை 2,80,52,357 பயணிகளும் 2019ல் 3,28,13,628, 2020 ஆம் ஆண்டு 1,18,56,982 மற்றும் 2021 ஆம் ஆண்டு 2,53,03,383 பயணிகளும் பயணம் செய்துளளனர். 

2015 முதல் 2022 வரை 15,88,08,208 பேர் பயணம் செய்துள்ளனர்' என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT