தமிழ்நாடு

‘நலம் 365’ யூ-டியூப் சேனல்: தொடங்கிவைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

DIN

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இதனை மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார். மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணா்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பொது சுகாதாரத் துறைக்கென பிரத்யேக யூ-டியூப் சேனல் இயங்கி வருகிறது. தற்போது, அடுத்த கட்டமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முழுமையான செயல்பாடுகளை விளக்கும் வகையில் ‘நலம் 365’ சேனல் தொடங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் துறை சாா்ந்த முழுமையான தகவல்கள் அனைத்தும் மக்களிடையே கொண்டு சோ்க்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT