ஜன. 4-ல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் வரும் 4ஆம் தேதி தொடங்கப்படும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் வரும் 4ஆம் தேதி தொடங்கப்படும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
Advertisement
Advertisement
ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6வது வாரத்திலும், 14வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.