தமிழ்நாடு

நாளுக்கு நாள் உயரும் தங்கம்: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில வாரங்களாக  தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச.12 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,360-க்கும், டிச.14 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.40,800 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின்னர், 16 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.40,360 ஆக குறைந்து விற்பனை செய்யப்பட்டது. பிறகு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், 2023 -ம் ஆண்டுக்கான வர்த்தகம் தொடங்கிய முதல் நாளிலேயே (ஜன.2)  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,150 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் உயர்ந்து ரூ.74.50 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.74,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், தங்கம் வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT