சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: 5 பேர் பலி
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
மதுரை மாவட்டம், விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் மகன் விஜய ராகவன்(41). சென்னை நங்கநல்லூர், இந்து காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
விஜய ராகவன்,மனைவி வச்சலா, தாய் வசந்தலட்சுமி, மகன்கள் விஷ்ணு, ஆதீர்த் ஆகியோருடன் கேரளாவில் உள்ள கோயிலுக்குச் சென்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சிபுரம் திரும்பிக்கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
திட்டக்குடி அடுத்துள்ள அய்யனார்பாளையம் அருகே வாகன நெரிசல் காரணமாக முன்னால் நின்றிருந்த லாரிக்கு பின்னால் காரை நிறுத்தியிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில், இரண்டு லாரிகளுக்கு இடையே கார் சிக்கி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி காரில் சிக்கியிருந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மதுரையில் உள்ள வீரராகவனின் தங்கை வசுதாரணிக்கு தகவல் அளித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.