கோப்புப்படம் 
தமிழ்நாடு

அரசுப் பேருந்து மோதி தூய்மைப் பணியாளர் தம்பதி பலி

இன்று அதிகாலை சைக்கிளில் சென்ற தூய்மைப் பணியாளர் தம்பதியினர்  ராஜேந்திரன் மற்றும் தேவி மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானர்.

DIN

கோயம்புத்தூர்: இன்று அதிகாலை சைக்கிளில் சென்ற தூய்மைப் பணியாளர் தம்பதியினர்  ராஜேந்திரன் மற்றும் தேவி மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியாகினர்.

ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரியும் தம்பதியினர்  ராஜேந்திரன் மற்றும் தேவி, இவர்கள் தங்கள் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது பூலுவம்பட்டி அருகே அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நேர்ந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திரன் சைக்கிள் மீது எதிரே வந்த அரசுப்பேருந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தம்பதிகள் ராஜேந்திரன் மற்றும் தேவி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் குபேரன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT