தமிழ்நாடு

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் அறிவிப்பு

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி விருது பெறுவோர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். 

இந்நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாவல் பிரிவில் எழுத்தாளர் தேவி பாரதி, சிறுகதை பிரிவில் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ், கவிதை பிரிவில் எழுத்தாளர் தேவதேவன், மொழிபெயர்ப்பு பிரிவில் எழுத்தாளர் சி.மோகன், நாடகம் பிரிவில் நாடகக் கலைஞர் பிரளயன் ஆகியோருக்கு பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் ஜனவரி 6ஆம் தேதி துவங்க உள்ள புத்தகக் காட்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருதுகளையும், பரிசுத் தொகையையும் வழங்க உள்ளார்.  

சென்னை புத்தக்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பாண்டு புத்தகக் காட்சிக்காக 1000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT