ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? தோ்தல் அதிகாரி பதில்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா (46) ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார். இவர் மாரடைப்பு காரணமாக புதன்கிழமை மரணமடைந்தார்.
இந்நிலையில், வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீட்டு நிகழ்வின்போது ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தோ்தல் அதிகாரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த தேர்தல் அதிகாரி, சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியான 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் முறைபடி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றார்.