தமிழ்நாடு

ஜார்க்கண்ட் அரசைக் கண்டித்து சேலத்தில் ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்!

DIN

சேலம்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சம்மேத் ஷிகர்ஜி கோயிலை சுற்றுலா தளமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஜெயின் சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஜெயின் சமூக மக்களின் ஸ்ரீ சம்மேத் ஷிகர்ஜி கோயில் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த புனித ஸ்தலத்தை ஜார்க்கண்ட் அரசு சுற்றலா தளமாக மாற்றியுள்ளது. இதனால், ஜார்கண்ட் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெயின் சமூக மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்மேத் ஷிகர்ஜி புனித கோயில் பல ஆண்டுகளாக தங்களின் புனித ஸ்தலமாக விளங்குவதாகவும், 27 தீர்த்தகாரர்களில் 24 பேர் மோட்சம் பெற்ற இந்த இடத்தை தற்போது அம்மாநில அரசு சுற்றுலா தளமாக மாற்றுவதால் தளத்தின் புனிதம் கெட்டு வருகிறது என்றும், தொடர்ந்து, குஜராத் கிர்ணர், பாலிதானா புனித ஸ்தலங்களையும் சுற்றுலா தளமாக மாற்ற அம்மாநில அரசு அறிவித்திருப்பதாகவும் இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT