கோப்புப்படம் 
தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் மீன், இறைச்சி கொண்டுசெல்லக் கூடாதா? பயணிகள் கொந்தளிப்பு!

இறைச்சி சந்தையில் வாங்கிய சமைக்காத இறைச்சி மற்றும் கடல் உணவுகளை மெட்ரோ ரயிலில் எடுத்து செல்ல அனுமதியில்லை என சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) தெரிவிக்கிறது.

DIN

இறைச்சி சந்தையில் வாங்கிய சமைக்காத இறைச்சி மற்றும் கடல் உணவுகளை மெட்ரோ ரயிலில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (சிஎம்ஆர்எல்) தெரிவிக்கிறது.

பயணிகள் சமைக்காத இறைச்சி மற்றும் கடல் உணவுகளை மெட்ரோ ரயில்களில் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இதுபோன்ற பொருள்களை எடுத்துச் செல்வோரை தடுத்து நிறுத்தும் மெட்ரோ ஊழியர்கள், சமைக்காத இறைச்சியை கொண்டு செல்லும் பயணிகளை நிலைய வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.

மெட்ரோ ரயிலில் இறைச்சி, மீன், இறந்த பறவைகள், விலங்குகள் போன்றவற்றை கொண்டு செல்லத் தடை உள்ளது.

சமீபத்தில் மெட்ரோ ரயில் ஊழியர்கள், 2014ன் மெட்ரோ ரயில்வே விதிகளின் படி, சமைக்காத இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக  அறிவிப்பு பலகையை வைத்தனர். 

ஏனெனில் சமைக்கப்படாத இறைச்சி மற்றும் கடல் உணவுகள் குளிரூட்டப்பட்ட பெட்டிகளுக்குள்(AC)  துர்நாற்றம் வீசக்கூடும் மற்றும் மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூருவில், சமைக்கப்படாத இறைச்சி அல்லது கடல் உணவுகளை எடுத்துச் செல்லும் பயணிகள் மெட்ரோ ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் சமைத்த உணவை எடுத்துச் செல்லலாம் என்றாலும், ரயில் நிலைய வளாகத்திலோ அல்லது ரயில்களிலோ அதைத் திறக்கவோ உட்கொள்ளவோ அனுமதிக்கப்படுவதில்லை.

சமைக்கப்படாத இறைச்சி மற்றும் கடல் உணவுகளை துர்நாற்றம் வீசாத வகையில், இறுக்கமாக அடைத்து எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT