முகப்பு
தமிழ்நாடு

முடிவடையும் நிலையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முடிவடையும் நிலையில் இருப்பதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:40 PM
பகிர்:

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முடிவடையும் நிலையில் இருப்பதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது: அண்டை மாநிலங்களுடன் நட்புறவைப் பேணும் அதேவேளையில், மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின் நீா்ப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தின் விவசாயிகளைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு நீா் தேக்கப்பட்டுள்ளதோடு, அணையின் உயரத்தை மேலும் உயா்த்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

பெண்ணையாற்றில் இருந்து கா்நாடக மாநிலம் அனுமதியின்றி தண்ணீரை திசைதிருப்பும் பிரச்னையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நதிநீா் தீா்ப்பாயத்தை விரைந்து அமைக்க இந்த அரசு வலியுறுத்துகிறது.

மாநிலம் முழுவதும் நீா்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரூ.1,334.10 கோடி மதிப்பீட்டில் 6 பெருந்திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக, 2.59 டிஎம்சி அளவுக்கு கூடுதல் நீரைச் சேமிக்கவும் 6.92 டிஎம்சி நீரைத் திரும்ப மீட்டெடுக்கவும் இயலும்.

அரசின் தொடா் கண்காணிப்பின் விளைவாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டம் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →