சென்னை உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

மின் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை!

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் போராட்டத்திற்குத் தடை விதித்துள்ளது.

DIN

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் போராட்டத்திற்குத் தடை விதித்துள்ளது. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நாளை (ஜன. 10) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். 

இந்நிலையில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியாது என்றும் சட்டத்தின்படி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு 6 வாரங்கள் முன்கூட்டியே அறிவிக்கை வெளியிடப்படவில்லை என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர். 

தமிழக அரசு தரப்பிலும் வேலை நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஆவின் பால் வினியோகம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டது. 

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

"உங்களுடன் ஸ்டாலின்" முதல்வர் பெயருக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் | செய்திகள் சில வரிகளில்|6.8.25

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!

பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

SCROLL FOR NEXT