கோப்புப்படம் 
தமிழ்நாடு

இயற்கை-யோகா பட்டப்படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்!

தமிழக அரசின் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை(ஜன.10) தொடங்குகிறது. 

DIN


சென்னை: தமிழக அரசின் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை(ஜன.10) தொடங்குகிறது. 

சென்னை அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட தமிழ்நாட்டில் தமிழகத்தில் 19 கல்லூரிகளில் 60 இடங்களும், செங்கல்பட்டு கல்லூரியில் 100 இடங்கள் என மொத்தம் 1,710 இடங்கள் உள்ளன.

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் பிளஸ் 2 இல் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். 

5 ஆண்டு பட்டப்படிப்பான இதற்கு நீட் தேர்வு கிடையாது. இதில் சேருவதற்கு இரண்டாயிரத்தும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

இவர்களுக்கான கலந்தாய்வு அரும்பாக்கத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(ஜன.10) நடைபெறுகிறது. 

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இயக்குநரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

ஆப்கானிஸ்தானை வென்றது வங்கதேசம்

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT