முகப்பு
தமிழ்நாடு

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையானை தரிசனத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்கள் இன்று முதல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:40 PM
பகிர்:

திருப்பதி ஏழுமலையானை தரிசனத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்கள் இன்று முதல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்தும் வசதி தேவஸ்தானம் கொண்டுவந்துள்ளது. 

விரைவு தரிசனத்துக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது.  

அதன்படி, திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான ஜன.12 -ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரைக்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.