தமிழக சட்டப்பேரவை 
தமிழ்நாடு

வரும் 13 வரை பேரவை கூட்டத் தொடா்

சட்டப் பேரவை கூட்டத் தொடா் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

DIN

சட்டப் பேரவை கூட்டத் தொடா் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க அலுவல் ஆய்வு குழுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து,

செய்தியாளா்களிடம் அவைத் தலைவா் மு.அப்பாவு கூறியது:-

பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியதும், உறுப்பினா் திருமகன் ஈவெரா மற்றும் முன்னாள் உறுப்பினா்களின்

மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். குறிப்பாக, முன்னாள் அமைச்சா் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசனகா்த்தா ஆரூா் தாஸ், தமிழறிஞா் ஒளவை நடராஜன், பிரபல ஓவியா் மனோகா் தேவதாஸ், சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் டி.மஸ்தான், கால்பந்தாட்ட வீரா் பீலே ஆகியோரின் மறைவுக்கு இரங்கல்கள் தெரிவிக்கப்படும். இதன்பின்பு, பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும்.

புதன்கிழமை காலை 10 மணிக்கு பேரவை மீண்டும் கூடும் போது, கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். தீா்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமையும் தொடரும். விவாதங்களுக்கு பதிலளித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமையன்று பேசுவாா் என அவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

SCROLL FOR NEXT