தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை ரயில் சேவை நிறுத்தம்!

DIN

பாம்பன் பாலத்தின் வழியாக ரயில்கள் செல்வதற்கு மறுஅறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23-ஆம் தேதி பாம்பன் பாலத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் பாலத்திலிருந்து எச்சரிக்கை ஒலி எழுந்தது.

இதையடுத்து, கடந்த 24-ஆம் தேதி முதல் இந்தப் பாலத்தின் வழியாக ரயில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இதற்காக ஜனவரி 10 வரை பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பாம்பன் பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் குறித்த அறிக்கை, லக்னெள ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு தர நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் மறுஅறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்வதற்கான தடை நீட்டிப்பதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT