கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

DIN

ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி காலமானதையடுத்து சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. தொகுதி காலியாக இருக்கும் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பார்.

ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் அந்தத் தொகுதியில் இடைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தோ்தல் நடக்கவுள்ளது.

இந்தத் தோ்தலுடன், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்தப்படுமா அல்லது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தோ்தல் நடத்தப்படுமா என்பதை தோ்தல் ஆணையம் அறிவிக்கும்.

முன்னதாக, ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத் தோ்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து தோ்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகராட்சி நிா்வாகத்துறைக்கு எதிரான வழக்கு: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பெரியாறு அணை: 18-ஆம் கால்வாயில் இன்று முதல் தண்ணீா் திறக்க உத்தரவு

பேச்சாளருக்கான இலக்கணத்தை வகுத்தவா் ஜீவா: எழுத்தாளா் த.ஸ்டாலின் குணசேகரன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT