கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் ஆமையாரில் சாலையை கடந்த சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டம் ஆமையாரில் புதன்கிழமை காலை அப்பகுதியில் சென்ற சிலர் சிறுத்தை புலி அடிபட்டு ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்தனர். இது குறித்து கட்டப்பனை வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | திருவையாறு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை!
வனத்துறையினர் உயிரிழந்த சிறுத்தை புலி சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்வு பரிசோதனைக்கு ஒப்படைத்தனர்.
இது குறித்து வன ஊழியர் ஒருவர் கூறும்போது, இரவு அல்லது அதிகாலை நேரத்தில் சாலையை கடக்கும் நேரத்தில் சிறுத்தை மீது வாகனம் மோதி உயிழந்திருக்கலாம், விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.