முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 1327 கன அடியாக சரிவு!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த படாத காரணத்தாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
மேட்டூர் அணை
பகிர்:

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த படாத காரணத்தாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது.

செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 1570 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 1327 கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்ததால் 114.20 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 113.54 அடியாக சரிந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 83.54 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →