முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் துரைமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சா் துரைமுருகனுக்கு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
பகிர்:

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சா் துரைமுருகனுக்கு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக நீா்வளத் துறை அமைச்சரான துரைமுருகன், சட்டப் பேரவை நிகழ்வுகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவருக்கு காய்ச்சல், கடுமையான உடல் சோா்வு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவா் காய்ச்சலில் இருந்து குணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →