தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

DIN

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

புத்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. அச்சடிக்கப்பட்ட உரையில் இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல், கலைஞர், அண்ணா, அம்பேத்கர் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் படிக்காமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநரின் செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையிலேயே கண்டனம் தெரிவித்ததுடன், அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால், பேரவை கூட்டம் முடிவதற்குள் ஆளுநர் கிளம்பிச் சென்றார்.

இரண்டாம் நாளான நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாள் முழுவதும் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் கேள்விநேரம் தொடங்கியுள்ளது. கேள்விநேரமானது யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!

மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ஆண்ட்ரியா விளக்கம்!

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

SCROLL FOR NEXT