தமிழ்நாடு

மாரடைப்புக்கு முதலுதவி செய்யும் ஏஇடி கருவி: தாம்பரம் ஆணையரகத்தின் புதிய முயற்சி

சாலை மற்றும் பொதுவிடத்தில் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு முதலுதவி செய்யும் ஏஇடி கருவியை சோளிங்கநல்லூர் சிக்னல் பகுதியில் பொருத்தி தாம்பரம் ஆணையரகம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.

DIN


சென்னை: சாலை மற்றும் பொதுவிடத்தில் மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு முதலுதவி செய்யும் ஏஇடி கருவியை சோளிங்கநல்லூர் சிக்னல் பகுதியில் பொருத்தி தாம்பரம் ஆணையரகம் புதிய முயற்சியை எடுத்துள்ளது.

ஆட்டோமேடட் எக்ஸ்டர்னல் டெஃபிப்ரூலேட்டர் எனப்படும் ஏஇடி கருவியானது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரியும் ஒருவருக்கு, மருத்துவக் குழுவினர் வந்து முதலுதவி செய்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முந்தைய கோல்டன் நேரம் என்பதைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்ற உதவும் கருவியாகும். இந்த கருவியின் மூலம் மாரடைப்பு ஏற்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அலர்ட் எனப்படும் தன்னார்வலக் குழுவுடன் இணைந்து தாம்பரம் ஆணையகரம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏஇடி கருவியின் விலை ரூ.1.35 லட்சமாகும்.

பொதுவிடங்களில் மாரடைப்பு ஏற்படுவது அதிகம். எனவே, மருத்துவக் குழுவினர் வருவதற்கு முன்பு, அவர்களை காப்பதாற்றுவதற்கான முயற்சிகள் கிடைப்பது அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள், காவல்துறையினர், பொதுமக்கள், கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கருவிலேயே அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்குமாம். இந்த கருவியின் மூலம், மாரடைப்பு ஏற்பட்டவரின் இதயத்துக்கு  வெளியிலிருந்து ஒரு அழுத்தம் அல்லது மின்அலைகள் மூலம் ஷாக் கொடுத்து இதயத்தை மீண்டும் துடிக்க வைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT