தமிழ்நாடு

இரு கவிஞர்களை பேரவையில் மேற்கோள் காட்டிய முதல்வர்!

DIN


மக்களுக்காக உழைப்பது குறித்து சட்டப்பேரவையில் இரு கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி,  முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். 

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு பதிலுரை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசு மேற்கொண்ட பல்வேறு நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். மேலும், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

ஆட்சி பொறுப்பை வழங்கிய தமிழக மக்களுக்காக உழைப்பது தொடர்பாக பேசும்போது, பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கோள் காட்டினார். 

கடிகாரம் ஓடும் முன்பு ஓடு என்ற பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

மத்திய அரசிடமிருந்து நலத் திட்டத்துக்கான நிதிகளை கேட்டுக் கேட்டு பெற வேண்டிய சூழல் உள்ளதாக குறிப்பிட்டர் முதல்வர் மு.க. ஸ்டாலின், கவிஞர் முத்துக்கூத்தன் கவிதையை மேற்கோள்காட்டி, ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் கைகள் மறைவதில்லை என்று குறிப்பிட்டார். 

வேகமாகவும் அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்பட்டு வருவதாகவும் உரையில் முதல்வர் சுட்டிக்காட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களில் 4 நாள்கள் கனமழை எச்சரிக்கை

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான சான்றிதழ் அளிப்பு

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

பிரதமா் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பாா்: தொழில் நிறுவனங்களிடம் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை

திருப்பத்தூா் எழுத, படிக்க தெரியாதவா்கள் கணக்கெடுக்கும் பணி: கல்வி இணை இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT