தமிழ்நாடு

சனிப்பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

திருநள்ளாற்றில் 2023-ஆம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

DIN

திருநள்ளாற்றில் 2023-ஆம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். இத்தல இறைவன் தர்ப்பாரண்யேஸ்ரர் என்றும், அம்பிகை பிராணேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள். 

கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட இத்தலத்திற்கு வந்து மக்கள் வழிப்பட்டுச் செல்கின்றனர். சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கறுப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுவது மேலும் சிறப்பானதாகும். 

அந்த வகையில், வாக்கிய பங்சாஞ்கத்தின்படியே திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி பின்பற்றப்படுகிறது. எனவே, வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் ஜன. 17 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் வாக்கியப் பஞ்சாங்கம் பின்பற்றப்படுகிறது. எனினும்,  திருப்பதி உள்பட பிற மாநிலங்களில் திருக்கணித முறை பின்பற்றப்படுவது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT