மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை! 
தமிழ்நாடு

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.42,368!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42,368 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

DIN


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42,368 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக உள்ளது. கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிச.31 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 9-ஆம் தேதி 42 ஆயிரத்தைத் தாண்டி சற்று குறைந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டது. 

இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை (ஜன.14) தங்கத்தின் விலை மீண்டும் வரலாற்றின் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,296 ஆக விற்பனையானது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,368 ஆக உச்சம் தொட்டுள்ளது. 

தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரிப்பதால், ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இது தங்க முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பாக இருந்தாலும் நடுத்தர மக்கள், ஏழை, எளிய மக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையும் அளிக்கக் கூடியதாகவே உள்ளது. 

அதேசமயம், வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.75 ஆகவும், ஒரு கிலோ ரூ.75,000 ஆக விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT