தமிழ்நாடு

மணப்பாறை ஆவரங்காடு ஜல்லிக்கட்டு: 17 வீரர்கள் காயம்!

மணப்பாறை அடுத்த ஆவரங்காடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 350 காளையர்களும் களம் கண்டு போட்டி நடைபெற்று வருகிறது.

DIN

மணப்பாறை அடுத்த ஆவரங்காடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 350 காளையர்களும் களம் கண்டு போட்டி நடைபெற்று வருகிறது. வருவாய் கோட்டாட்சியர் போட்டியினை தொடக்கி வைத்துள்ளார். இதுவரை 17-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவரங்காடு பொன்னர் - சங்கர் ஆலய திடலில், மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களால் நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடியசைத்து போட்டியினை துவக்கி வைத்துள்ளார்.


முதலில் நான்கு கிராமங்களின் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 700-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது.

காளைகளை அடக்க 25, 25 தொகுப்பாக 350 காளையர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த சில காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டுகூட பார்க்க முடியாதபடி சீறிப்பாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து அடக்கினர். காளைகளைப் பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் சேஷ்டி, தலைக்கவசமும் அளிக்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

 
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை வீரர்கள், பார்வையாளர், மாட்டு உரிமையாளர் என 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT