தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள்!

வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவத்தில், குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

DIN

புதுக்கோட்டை: வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவத்தில், குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடியிருப்புக்கு குடிநீா் விநியோகிக்கப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் கடந்த டிசம்பா் டிச. 26-இல் மனிதக்கழிவு கலந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வெள்ளனூா் காவல் நிலையத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏடிஎஸ்பி தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள், 4 காவல் ஆய்வாளா்கள், 4 உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 11 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், போலீஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், பாதிக்கப்பட்டவா்களையே குற்றவாளியாக்க முயற்சிப்பதாகவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழ்நாடு காவல்துறைத் தலைவா் சைலேந்திரபாபு கடந்த ஜன. 14ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், சிபிசிஐடி திருச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்பாண்டி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவர், அனைத்து சமூக மக்களிடமும் தனித்தனியே விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT