டாஸ்மாக்கை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணிநேரம் முன்பே மூட முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணிநேரம் முன்பே மூட முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க- காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்
அப்போது, டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணிநேரம் முன்பே மூட முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதைத்தொடர்ந்து மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் அதில் மனுதாரர் தலையிட முடியாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
மேலும் பார்கள் இயங்கும் நேரத்தை இரவு 10 மணிக்கு மேல் நீட்டிப்பது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் அப்போது டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.