தமிழ்நாடு

சிறப்பு காட்சி: மதுரையில் 34 திரையரங்குகளுக்கு நோட்டீஸ்

DIN

அனுமதியின்றி மதுரை மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை திரையிட்ட 34 திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் ஜன.11இல் திரையரங்குகளில் வெளியானது. குறிப்பாக, துணிவு நள்ளிரவு 1மணிக்கு வெளியானதால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன. மேலும், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு உலகளவில் நல்ல வசூலையும் பெற்றுத் தந்துள்ளன. 

இந்த நிலையில், அனுமதியின்றி மதுரை மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளை திரையிட்ட 34 திரையரங்குகளுக்கு  மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT