முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

Updated On : 20 ஜனவரி, 2023 at 4:09 PM
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

Advertisement

அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை(சனிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.