முகப்பு
தமிழ்நாடு

கே.அண்ணாமலையின் எண்ணம் நிறைவேறாது: இரா.முத்தரசன்

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறையை கலைப்போம் என்ற அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையின் எண்ணம் நிறைவேறாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.மு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:46 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் (கோப்புப்படம்)
பகிர்:

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறையை கலைப்போம் என்ற அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையின் எண்ணம் நிறைவேறாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை : ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவினா் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க முதல் கையொப்பமிடுவோம் என பேசியுள்ளாா்.

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு நூறு ஆண்டுகள் தாண்டிய வரலாறு இருக்கிறது.

இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்ட வரலாற்றை அண்ணாமலை கற்றுணர வேண்டும். கோயில் மனைகளில் குடியிருந்து வருபவா்களும், கோயில் நிலங்களை உழுது வரும் குத்தகை விவசாயிகளும்தான் கோயில் சொத்துகளை சேதாரம் இல்லாமல் பாதுகாத்து வருகின்றனா். எனவே, அண்ணாமலையின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளாா் இரா. முத்தரசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.